உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் 22ம் தேதி, குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெறுகிறது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாட்டு விருந்தினர்கள், இந்திய முக்கிய விருந்தினர்கள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்கும் மிக பிரமாண்ட விழாவாக நடைபெற உள்ளது.
ராமர் கோயிலுக்கு உலகம் முழுவதுமிருந்து ராம பக்தர்கள் விதவிதமான காணிக்கைகளை அனுப்பத் துவங்கியுள்ளனர். அதன்படி, 108 அடி நீள ஊதுபத்தி, 2,100 கிலோ எடையுள்ள மணி, 1,100 கிலோ எடையுள்ள மாபெரும் விளக்கு, தங்க காலணிகள், 10 அடியில் பூட்டு மற்றும் சாவி, ஒரே சமயத்தில் எட்டு நாடுகளின் நேரத்தைக் காண்பிக்கும் வித்தியாசமான கடிகாரம் என காணிக்கையாக வரும் பொருள்களின் பட்டியல் நீள்கிறது.
வீடியோ இணைப்பு: https://twitter.com/i/status/1744956449426739544