இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது.
அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.
தாயகத்தில் பெரும்பாலான கட்சிகள் அப்பிரகடனத்தை நிராகரித்துவிட்டன. குடிமக்கள் சமூகங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தமிழரசுக் கட்சி இவ்விடயத்தில் அதன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
பிரகடனமானது போர்க் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை அரசைக் காப்பாற்றும் உள்நோக்கமுடையது என்று புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன.
இந்த சூழலில் கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பின் நிர்வாக பொறுப்பில் இருந்து விலகுவதாக Dhushy Jeyarajah அறிவித்துள்ளார். தமிழ் மக்கள் பக்கம் நிற்பதாக கூறியுள்ளார்.