காமெடியனாக நடித்து வெற்றிக் கண்டவர் தான் நடிகர் வடிவேலு. சமீபகாலமாக இவர் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக போண்டாமணி மற்றும் விஜயகாந்த் மறைவின்போது நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத வடிவேலுவின் இந்த செயல் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமா? தனக்கு சினிமாவில் வாய்ப்புக்கொடுத்த ராஜ்கிரணை பொதுவிழாவில் கண்டதும் அவரை கண்டுகொள்ளாமல் சென்றது என பல எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ஆனால் எல்லாவற்றிற்கும் மவுனம் சாதித்து வருகிறார். இந்நிலையில் பிரபல நடிகர் பெஞ்சமின், வடிவேலு குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நான் போண்டாமணி போன்ற பல நடிகர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்ததற்கு வடிவேலு தான் காரணம். அவர் நல்ல நடிகர் ஆனால் நல்ல மனிதர் இல்லை. படப்பிடிப்பு தளத்தில் சாப்பாடு கிடைக்காமல் திண்டாடினாலும் அதுகுறித்து வடிவேலு எதுவும் கேட்கமாட்டார்.
நாங்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு ரோட்டில் இருக்கும் போது அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வடிவேலு கேரவனில் இருப்பார்.
கேப்டன் விஜயகாந்த் நடிகர்களின் வாழ்க்கையை புரிந்துகொண்ட அவர்களுக்கு உதவி செய்வார். யார் மனதும் நோகும்படி விஜயகாந்த் பேசமாட்டார். அனைவரையும் சாப்பிட வைத்து அழகு பார்ப்பார் என்று பெஞ்சமின் கூறியுள்ளார். பல நடிகர்கள் வடிவேலு பற்றி பல எதிர்மறையான சம்பவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, இனி சினிமாவில் வடிவேலுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் இனி சினிமாவில் அவர் பழைய இடத்தை பிடித்தாலும் கூட யாரும் ரசிக்க மாட்டார்கள் என்பதும் பொதுவான கருத்து.