விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பாலா. இவர் ஆரம்பத்தில் சினிமாவில் வந்த புதிதில் இவரை யாருக்கும் பிடிக்காது. காரணம் இவரது தோற்றம். மெலிந்த தேகம், அப்பாவியான பார்வை. ஆரம்பத்தில் இவருக்கு பல நெகட்டிவ் விமர்சனங்களே எழுந்தது. அவற்றை எல்லாம் தகர்த்து எறிந்து இப்போது திரைப்படங்கள் வெற்றி விழா மற்றும் இசை வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பாலா, தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
பாலா சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக இருந்தாலும் ஒரு பக்கம் மக்களுக்கு பொது சேவையையும் செய்து வருகிறார். சமீபத்தில் மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல உதவிகளை செய்து இருந்தார். இந்நிலையில் தற்போது பாலா, மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோவை வழங்கி இருக்கிறார்.
இதை பற்றி பேசிய பாலா, மருத்துவத்திற்கு செல்பவர்கள் பேருந்திற்காக காத்திருந்து செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது. அவசர காலகட்டத்தில் ஆட்டோவில் கூட செல்ல முடியவில்லை.
இதனால் தான் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்காக இலவச ஆட்டோ சேவையை தொடங்கிறோம். ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பெட்ரோல் செலவை நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று பாலா கூறியுள்ளார். ஒரு சின்ன வளர்ந்து வரும் நடிகரே இவ்வளவு உதவி செய்கிறார் என்றால் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஏன் ஒரு ரூபாயை கூட பர்சில் இருந்து எடுத்து மக்களுக்கு செலவு செய்ய தயங்குகிறார்கள்?? பாலா இது மட்டும் செய்யவில்லை, முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு பல உதவி செய்கிறார், ஏழை மாணவர்களை படிக்க வைக்கிறார், பல ஏழை மக்களின் மருத்துவ செலவை ஏற்றுக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.