ரஜினியின் காதல் தோல்வி! யார் அந்த பெண்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்திற்கு அறிமுகம் தேவையா? மூன்று தலைமுறையாக ரசிக்கும் ஒரே நடிகர். ரஜினிகாந்த், லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் விரும்பிய இன்னொரு பெண் பற்றி தெரியுமா? ஆம்! நடிகர் ரஜினிகாந்த் வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் தோல்வி குறித்து தான் இந்த பதிவு. திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன்பின் கதாநாயகியாக முன்னணியில் வலம் வந்தவர் ஸ்ரீதேவி. ரஜினியுடன் இணைந்து முதல் முறையாக மூன்று முடிச்சு என்ற படத்தில் நடித்தார். ஸ்ரீதேவியுடன் இணைந்து நடிக்கும்போது, ஸ்ரீதேவி மேல் காதல் கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

 ஸ்ரீதேவி வீட்டார்களிடம் பெண் கேட்கலாம் என எண்ணி, ஸ்ரீதேவியின் வீடு கிரகப்பிரவேசத்திற்கு சென்ற ரஜினிகாந்த், அப்போது தனது காதலை ஸ்ரீதேவியிடம் கூறலாம் என எண்ணியுள்ளார். அப்போது திடீரென ஸ்ரீதேவியின் வீட்டில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் நேரம் சரியாக இல்லை என நினைத்து பெண் கேட்காமல் திரும்பிவிட்டாராம். இந்த விஷயத்தை இயக்குனர் பாலச்சந்தர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஸ்ரீதேவி மறைந்த பின்னரும் கூட அவர் குறித்த கிசு கிசு செய்தி வெளியாவது ஆச்சர்யப்பட வைக்கிறது.

Related Posts