Font size: 15px12px
Print
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள், மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, கால்வாயில் விழுந்ததால் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்.
கிளிநொச்சியில் இருந்து இராமநாதபுரம் செல்லும் பிரதான வீதியான பனங்கண்டி – இரணைமடு குளத்தின் பிரதான கால்வாயிலேயே நேற்றிரவு மோட்டார் சைக்கிள் விழுந்துள்ளது.
இராமநாதபுரம், கல்மடு நகர் பகுதியைச் சேர்ந்த தயாளன் தனுசன் மற்றும் இராமநாதபுரம் அழகாபுரி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் சதீசன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரின் சடலமும் கிளிநொச்சி நீதவான் முன்நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts