டெலிகாம் இனை வாங்க அம்பானி, அல்லிராஜா களத்தில்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தனியார்மயமாக்கலின் கீழ் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் பங்கு முதலீட்டுக்கான தகுதியை அறிவித்துள்ள மூன்று நிறுவனங்கள் தொடர்பான மதிப்பீடுகளை அரச நிறுவன மறுசீரமைப்புப் பிரிவு மேற்கொள்ளவுள்ளது.

அரச நிறுவன மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்த நிறுவனத்தின் அரசுக்குச் சொந்தமான பங்குகளில் முதலீடு செய்வதற்கான தகுதியை அறிவிக்க கடந்த வெள்ளிக்கிழமை (12) கடைசி நாளாகும், அதன்படி, இந்தியாவின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம், போfர்ச்சூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் மற்றும் பெட்டிகோ கொமசியோ இன்டர்நேஷனல் ஆகிய மூன்று நிறுவனங்கள் தகுதி அறிவிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வணிக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதில், இந்தியன் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் இந்தியாவின் வலிமையான வணிகக் குடும்பங்களில் ஒன்றான முகேஷ் அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையின் கீழ் உள்ள நிறுவனமாகும், அதே சமயம் பெட்டிகோ கொமசியோ நிறுவனம் அல்லிராஜா சுபாஷ்கரனுக்குச் சொந்தமான லைக்கா மொபைல் வணிகத்திற்குச் சொந்தமானது. , தற்போது ஸ்வர்ணவாஹினி உள்ளிட்ட தொலைக்காட்சி ஊடக வலையமைப்பைக் கொண்டவர். இந்நிறுவனங்களைத் தவிர, பார்ச்சூன் குளோபல் என்ற நிறுவனமும் தகுதிகளை சமர்ப்பித்துள்ளது.


Related Posts