கெஹலியவுக்கு எதிராக திரண்ட மக்கள் : மலர் வளையங்களும் சடலம் போன்ற உருவங

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

முன்னாள் அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது கறுவாத் தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று திரண்டுள்ளனர்.

இதன் காரணமாக கறுவாத் தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் உள்ளன.

மேலும், கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்துவதற்கு கலகத் தடுப்பு பொலிஸாரும் தயார் நிலையில் உள்ளனர்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொழும்பில் தற்சமயம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கெஹலியவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீதி நாடகமும் அரங்கேற்றப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக் களத்தில் மலர் வளையங்கள், மற்றும் உயிரிழந்த சடலங்களைப் போல உருவங்களை வடிவமைத்து தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையில் சுகாதார துறையில் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலியவே பதில் கூற வேண்டும் என தெரிவித்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


Related Posts