பாய்ந்த மாடுபிடி வீரர்களை சுத்தவிடும் காளைகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இன்றைய போட்டியில் 800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் சுமார் எட்டு சுற்றுகள் வரை இருக்கும். ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 75 வீரர்கள் பங்கேற்பார்கள். ஒரு சுற்றில் காளையை அடக்கி வெற்றி பெறும் வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளுக்குத் தகுதி பெறுவர்.

வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், நாணயம், உள்ளிட்ட பரிசுகளை அமைச்சர் உதயநிதி வழங்கி வருகிறார்.

 ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பாக மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்த பின்பே களத்திற்குள் இறங்க அனுமதிக்கப்படுவர். அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் மருத்துவ காரணங்களுக்காக ஏழு மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Posts