இளவட்டக் கல்லை தூக்கி, தலையைச் சுற்றி வீசி அசத்திய பெண்கள்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வடலிவிளையில் நடைபெற்ற பொங்கல் விழா விளையாட்டுப் போட்டியில் இளைஞர்களுக்கு இணையாக பெண்கள் இளவட்டக்கல்லை 22 முறை தலையைச்சுற்றி வீசி ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.

இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கடந்த ஆண்டு தெலங்கானாவில் நடைபெற்ற இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் பங்கேற்று முதல் பரிசை பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், 27 ஆம் ஆண்டு பொங்கல் விழா போட்டிகள் வடலிவிளையில் நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக இளவட்டக்கல் தூக்கும் போட்டி தொடங்கியது. முதலாவதாக ஆண்கள் காதுகளை பிடித்துக் கொண்டு கைகளின் முழங்கைகளை வைத்து உரலை தூக்கி அதிக நேரம் நிறுத்தும் போட்டி நடைபெற்றது.

இளவட்டக் கல்லுக்கு திருமண கல் என்ற பெயரும் உண்டு. முந்தைய காலங்களில் இளவட்டக்கல் என்ற 129 கிலோ எடையுடைய உருளை வடிவிலான இளவட்டகல்லை தூக்கி வீசுகின்ற இளைஞருக்குத்தான் பெண்ணை திருமணம் செய்து வைப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். 

இந்தப் பழக்கம் நாளடைவில் கைவிடப்பட்டுள்ள போதிலும் இன்றும் சில கிராமங்களில் இளவட்டக்கல் இளைஞர்களின் மன வலிமையையும், உடல் பலத்தையும் சோதிக்கும் அளவீடாக பார்க்கப்படுகிறது. அதிலும் இளவட்டக்கல் என்றாலே திருநெல்வேலி மாவட்டம் வடலிவிளைதான் அதற்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

Related Posts