வானில் பறந்த பலூன் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் பலி!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் எலாய் என்கிற பாலைவனப் பகுதியில் வெப்பக்காற்று பலூன்கள் மூலமாக வானிற்கு பறந்து சென்று, பின்னர் அங்கிருந்து ஸ்கை டைவிங் செய்யும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 

இதையொட்டி 8 ஸ்கை டைவர்கள், 4 பயணிகள் மற்றும் ஒரு விமானி என மொத்தம் 13 பேர் பலூன் ஒன்றில் கிளம்பியுள்ளனர். திட்டமிட்டபடி ஸ்கை டைவர்கள் பலூனில் இருந்து கீழே குதித்து பாராசூட் மூலம் தரை இறங்கினர்.

அதன்பின்னர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த பலூன், தாறுமாறாக பறக்கத் துவங்கியுள்ளது. சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உயரம் குறைந்து பாலைவனத்தில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பலூனில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Related Posts