விமான நிலையத்தில் 280 பயணிகளுடன் மோதிக்கொண்ட 2 விமானங்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜப்பானில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள தீவுகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் அடிக்கடி விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோ விமான நிலையத்தில் கொரியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று 289 பயணிகளுடன் கிளம்புவதற்காக தயார் நிலையில் இருந்தது. அப்போது கேத்தே பசிபிக் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருந்தது. 

அந்த விமானத்தில் விமானிகள், பயணிகள் என யாரும் இல்லை. டார்மார்க் எனப்படும் விமானங்கள் நிறுத்தும் பகுதியில் இருந்து கொரியன் ஏர்லைன்ஸ் விமானம் வெளியேறிய போது, கேத்தே விமானத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் கொரியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் ரெக்கை பகுதியில் சேதம் ஏற்பட்டது.

உடனடியாக மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts