“அஸ்வெசும” – மேலும் 03 இலட்சம் குடும்பங்கள் புதிதாக இணைப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

7 இலட்சம் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னர் மேலும் 03 இலட்சம் குடும்பங்கள் ‘அஸ்வசும’ சமூக நலத் திட்டத்தில் புதிதாக நிவாரணத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அஸ்வசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தை தாண்டியுள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அடுத்த தவணை தொகை வழங்கப்படுவதற்கு முன்னர், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான தவணைகள் விரைவில் வங்கிகளுக்கு வைப்பிலடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


Related Posts