ஈரான் உள்ளே புகுந்து பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

பாகிஸ்தான் எல்லையில் ஜெய்ஷ் அல்-அட்ல் நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, ஈரான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் விமானப்படை பதில் தாக்குதல் நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இரு நாடுகளின் எல்லைகளிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஈரான், பாகிஸ்தானின் இருதரப்பு உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, இரு நாடுகளுக்கிடையேயான எல்லை பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், “பாகிஸ்தான் பயங்கரவாத நிலைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் அந்த இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம். இந்தியாவை பொருத்தவரை பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தற்காப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இந்தியா புரிந்து கொண்டுள்ளது" என்றார்.

Related Posts