கலகலப்பான தொகுப்பாளினி வாழ்க்கையில் இவ்வளவு ரணமா?

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா. அவர் மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து செய்யும் கலாட்டா தான் நிகழ்ச்சியை தாண்டி ஹிட் கொடுக்கும். சூப்பர் சிங்கர் ஷோ என்றால் அந்த போட்டியாளர்களுக்காக மக்கள் பார்ப்பதைவிடவும் பிரியங்காவிற்காக பார்ப்பவர்கள் தான் அதிகம். பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றபோது பிரியங்கா அதிகம் நெகடிவ் ட்ரோல்களை தான் பெற்றார். இருப்பினும் மீண்டும் தொகுப்பாளராக வந்து அவர் கலக்கி வரும் நிலையில், அவர் மீது இருந்த விமர்சனங்கள் எல்லாம் காணாமல்போனது. பிரியங்கா பிக் பாஸ் ஷோவில் இருந்தபோது அவர் கணவரை பிரிந்தது பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கும் அவர் அது பற்றி வாய்திறக்கவில்லை. இந்நிலையில் பிரியங்கா மற்றும் அவரது அம்மா இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அம்மா பிரியங்கா திருமண வாழ்க்கை பற்றி பேசி இருக்கிறார். பிரியங்கா முந்தைய வாழ்க்கையில் செய்த தவறு போல இனி செய்யக்கூடாது. அவர் சரியான ஒன்றை தேர்வு செய்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அவரது அம்மா கூறி இருக்கிறார். அவரது அம்மா மீதுள்ள மரியாதை நிமிர்த்தமாகவே பிரியங்கா அமைதி காத்துவந்துள்ளார். இதுவரை இதுகுறித்து எங்கேயும் ஓப்பனாக பேசியதில்லை. காரியமே கண் என்றவாறு அயராது உழைத்து வருகிறார். அதுமட்டுமா? இப்போதெல்லாம் விஜய் டிவியில் எந்த ஷோவாக இருந்தாலும் சரி அதை பிரியங்கா தான் தொகுத்து வழங்குகிறார். பழைய தொகுப்பாளர்களை பார்க்க முடிவதில்லை. காரணம் ப்ரியங்கா ஸ்டைலை தான் மக்கள் விரும்புகிறார்கள். என்னதான் தானும் தன் கணவரும் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்தாலும் கூட எதையும் கண்டுகொள்ளாமல் வெற்றி நடைபோடுகிறார்.

Related Posts