புருஷனுக்கே அல்வா கொடுத்த நயன்தாரா?

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

விக்னேஷ் சிவன் தற்போது LIC என்ற படத்தை தொடங்கி இருக்கிறார். அவர் அஜித்தின் அடுத்த படம் இயக்க இருந்த நிலையில் அது ட்ராப் ஆனது. இந்த படத்திற்காக பெரிய எதிர்ப்பார்ப்புடன் இருந்த அவருக்கு எல்லாமே ஏமாற்றத்தில் முடிந்தது. கணவருக்கு சிபாரிசு செய்யும் விதமாக நயன்தாரா தரப்பில் இருந்து அஜித்திற்கு போன் கால் போனதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பக்கம் அதாவது அஜித் பக்கம் நோ ரெஸ்பான்ஸ். காரணம் என்னவாக இருக்க முடியும்? இப்போதெல்லாம் விக்னேஷ் சிவன் இயக்கும் படங்கள் எல்லாமே பெரும்பாலும் வெற்றி அடைவதில்லை. அதனாலே அஜித் பின்வாங்கி இருப்பார்.

இந்தநிலையில் தற்போது ஆரம்பித்துள்ள LIC படத்திற்கும் சிக்கல் எழுந்துள்ளது. டைட்டிலை மாற்றவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என LIC நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதனால் விரைவில் விக்னேஷ் சிவன் டைட்டிலை மாற்ற இருப்பதாக தெரிகிறது. இந்த படத்தில் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் ஹீரோயின் க்ரித்தி ஷெட்டி. மேலும் ஹீரோவின் அக்கா ரோலில் நயன்தாரா முக்கிய ரோலில் நடிக்கிறார் எனவும் முன்பு தகவல் பரவியது. ஆனால் தற்போது அவர் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நயன்தாரா சம்பளம் 10 - 12 கோடி என்பதால் தான் அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாகவும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

கணவர் சொன்னால் சம்பளத்தை குறைக்காமல் போய்விடுவாரா நயன்தாரா? கணவர் கேட்டால் இலவசமாகவே நடித்து கொடுப்பாரே? ஏன் தன்னுடைய தயாரிப்பில் கணவரை இயக்க சொல்லும் போது, சம்பள விஷயத்தில் முன்னபின்ன இருந்தாலும் நடித்து கொடுப்பதில்லையா? மற்ற தயாரிப்பு நிறுவனத்தில் தான் நடித்து இருக்கும்போது, ப்ரோமோஷன் கேட்டால் வருவதில்லை, அதுவே தன்னுடைய தயாரிப்பு என்றால் மெனக்கெட்டு ப்ரோமோஷன் செய்து கொள்வதில்லையா நயன்தாரா? அது போல் தனக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு என்றால் தக்காளி சட்னியா நயன் என கேள்வி எழுப்புகிறார்கள் ரசிகர்கள்.

Related Posts