ஏர்போர்ட் வாசலில் கெத்து காட்டும் அண்ணாமலை!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: பிரதமர் எந்த அளவிற்கு தமிழ்நாடு மக்கள் மீது அன்பு வைத்துள்ளார்கள் என்பது அவர் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வருவதிலே தெரிகிறது. என்னை பற்றி சொல்லும் கட்சிக்காரர்கள், அவர்கள் கட்சியில் அடுத்த தலைவர்களை அடையாளம் காட்ட முடியுமா? அவர்களை பொறுத்தவரையில் ஒரே தலைவரை மட்டுமே சுற்றி சுற்றி அடையாளம் காட்ட முடியும். அவர்களை பொறுத்தவரையில் ஒருவரை தூக்கி பிடித்து இவர் தான் என நாங்கள் சொல்லமாட்டோம். 

திமுகவில் ஒரு கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். முதலமைச்சர் வேட்பாளர் ஒருத்தர் தானா? புரியாதவர்களுக்கு பதில் சொல்லி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. என்னதான் ஒருவரை தயார் செய்து, விளம்பரப்படுத்தி, போட்டிகள் நடத்தி, 42 கோடி செலவு செய்தாலும் செயற்கையாக தேர்ந்தெடுத்தாலும் இயற்கை ஏற்று கொள்ளாது. பாஜகவில் மக்களோடு மக்களாக நின்றவர்கள் தலைவர் ஆகிறார்கள் இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Related Posts