உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக சடங்குகள் நிறைவு பெரும்விதமாக ஜனவரி 22 அன்று பிரதமர் மோடி பிரான் பிரதிஷ்டை பூஜையை நடத்த இருக்கிறார்.
இதற்காக மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் கருங்கல்லில் செதுக்கிய ராம் லல்லா சிலை நேற்றிரவு கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சிறப்பு பூஜையை தொடர்ந்து கருவறையில் நிறுவப்பட்டது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின் முக்கிய பங்கேற்பாளரான, பிரதமர் மோடி அதன்பொருட்டு கடும் விரதங்களை பின்பற்றி வருகிறார். அதாவது, வெங்காயம், பூண்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்களைத் தவிர்த்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல், தரையில் ஒற்றைத் துணி விரித்து அதில் மட்டுமே உறங்கி வருவதாகவும், உணவுக்கு பதில் இளநீர் மட்டுமே அருந்தி விரதத்தை தொடர்வதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக விரதம் மேற்கொள்வோர் கடைபிடிக்கும் நடவடிக்கைகள் இது. மோடியும் இவற்றை பின்பற்றுகிறாரா? என மக்கள் ஆச்சர்யம் அடைந்து வருகிறார்கள் அதேபோல் இந்த தகவல் எந்த அளவு உண்மை என தெரியவில்லை.
Font size: 15px12px
Print
Related Posts