இலங்கையில் இலத்திரனியல் வாக்களிப்பு முறை:விசேட கலந்துரையாடல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தேர்தல் சட்ட திருத்தத்திற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் விரைவில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பிலும் தற்போதுள்ள தடைகள் தொடர்பிலும் இந்த கலந்துரையாடலில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை மற்றும் தபால் மூல வாக்களிப்பு முறையினைப் பயன்படுத்தும் தரப்பினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் நடைமுறைத் தடைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதற்கிடையில், இந்தியா, கனடா, பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற ஜனநாயக ஆட்சி உள்ள நாடுகளின் தேர்தல் முறைகள் குறித்தும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பில் மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளால் 50க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான ஆய்வுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகள் இலத்திரனியல் வாக்களிப்பு முறைகளை பின்பற்றி வருகின்றன. இந்த முறைமை வாக்குகளை எண்ணவும் விரைவான வாக்குப் பதிவுக்கும் இலகுவாக உள்ளது. இலங்கையில் இம்முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

என்றாலும், இலங்கை மிகவும் சிறிய நாடாகவும் ஊழல்கள் அதிகமான நாடாகவும் இருப்பதால் சிவில் அமைப்புகளின் செயல்பாட்டாளர்களும் பல தேர்தல்கள் செயல்பாட்டாளர்களும் இவ்வாறான முறைமைகள் பொறுத்தமற்றது என்றும் அது ஜனநாயக தேர்தல் முறையில் நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Related Posts