நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் மரக்கறிகளின் விலையேற்றம் காரணமாக மக்கள் தமது உணவுத் தேவையினை பூர்த்தி செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் நாட்டில் கடந்த சில வாரங்களாக மீன்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
குறிப்பாக, 1 கிலோ தலபத்தின் விலை 1500 ரூபாவாகவும், 1 கிலோ கிருல்ல மீன் 600 ரூபாவாகவும், 1 கிலோ அலகொடுவா 900 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது மீன்களின் மொத்த விலை 50 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேலியகொடை மத்திய மீன் சந்தையின் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மீன் கொள்வனவுக்கான கேள்வி குறைந்துள்ளமையினால் இவ்வாறு பாரியளவில் மீன் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி தெரிவித்தார்.
பாறை, தலபத், ஷீலா உள்ளிட்ட பல்வேறு மீன் வகைகளின் விலை குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அந்தவகையில் பேலியகொடை மீன் சந்தையில் ஹரல்லோ மீன் 550 ரூபாவாகவும் சாலை மீன் 300 ரூபாவாகவும் பலயா மீன் 600 ரூபாவாகவும் பரவ் மீன் 800 ரூபாவாகவும் கெலவல்லா மீன் 1,000 ரூபாவாகவும் லின்னா மீன் 500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.