Font size:
Print
போர், கொரோனா, பொருளாதார பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில், கிட்டத்தட்ட 1 லட்சம் இலங்கை மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல ஏதுவாக, இலங்கை அரசு சார்பில் அவர்களுக்கு பல்நாட்டு கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு, முதல்கட்டமாக 200 பேருக்கு கடவுச்சீட்டுகளை வழங்கினார்.
விழாவில் கலந்துகொண்ட இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கும் பாஸ்போர்ட் கொடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
.
Related Posts