அமெரிக்காவின் பலஸ்தீன் தனிநாடு கோரிக்கை – நெதன்யாஹூ கொடுத்த பதில்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இஸ்ரேலுக்கும் அதன் மிகப்பெரிய ஆதரவு நாடான அமெரிக்காவுக்கும் இடையே முரண்பாடுகள்  ஆரம்பமாகியுள்ளது.

தற்போது இரு நாடுகளின் தீர்வுதான் நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும் என அமெரிக்கா கருதுகிறது.


இந்நிலையில், ஜோர்டானுக்கு மேற்கே உள்ள அனைத்துப் பகுதிகளிலும் இஸ்ரேலுக்கு பாதுகாப்பு தேவை என்றும் போருக்குப் பிறகு பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கு தனது எதிர்ப்பையும் நெதன்யாகு அமெரிக்காவிடம் வௌிப்படையாக வௌியிட்டுள்ளார்.

ஹமாஸ் மீது இஸ்ரேல் ஒரு தீர்க்கமான வெற்றியை அடையும் வரை காசா மீது தாக்குதல் தொடரும் என அவர் உறுதியளித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் கிளர்ச்சியாளர்களை முற்றாக அழிப்பதும் அவர்களிடம் சிக்கியுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்பதுமே இஸ்ரேலின் இலக்கு. இதற்குப் பல மாதங்கள் சொல்லாம் எனவும் இஸ்ரேலியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

காஸா மீது இஸ்ரேல் நடத்தி இராணுவ தாக்குதல்கள் காரணமாக 25 ஆயிரம் பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காஸாவில் 85 வீதமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இஸ்‌ரேலுக்கு கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கா உட்பட இஸ்ரேலின் பல நாடுகள் இரு நாடுகள் என்ற தீர்வை வலியுறுத்தி வருகின்றன.


Related Posts