கொழும்பு பேராயரின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பதில் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்கவும், அவரை குறித்த பதவியில் நியமிப்பதை தடுக்கும் இடைக்கால உத்தரவையும் கோரி கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை 31 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


குறித்த மனு நீதிபதிகளான பிரிதி பத்மன் சூரியசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இந்த விடயம் தொடர்பாக மேலும் இரு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்தார்.


இதனை பரிசீலித்த இதை நீதிபதிகள் அமர்வு, இந்த மனுவை எதிர்வரும் 31ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தது.


சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான அரசியலமைப்பு சபையும் தேஷ்பந்து தென்னகோனும் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Related Posts