குடிப்பார்! அடிப்பார்! நடிகை ஷகிலா மீது வளர்ப்பு மகள் பரபரப்பு புகார்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் நடிகை ஷகிலா வசித்து வருகிறார். இவருக்கும் இவரது வளர்ப்பு மகள் ஷீத்தலுக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. ஷகிலாவை ஷீத்தல், அவரது தாய் சசி, சகோதரி ஜமீலா ஆகியோர் தாக்கியுள்ளனர். 

தாக்குதல் சம்பவம் குறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது அண்ணன் மகளான ஷீத்தலை 6 மாத கைக்குழந்தையிலிருந்து ஷகிலா வளர்த்து வருகிறார்.
 

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஷகிலாவைத் தாக்கியது ஏன் என்பது குறித்து வளர்ப்பு மகள் ஷீத்தல் பரபரப்புப் பேட்டி கொடுத்துள்ளார். அதில், “ஷகிலா குடி போதையில் எனது தாய் மற்றும் சகோதரி குறித்து மோசமாக பேசினார். இதுதான் சண்டை வர முக்கியக் காரணம். இது ஒருநாள் மட்டுமல்ல, தினமும் குடித்துவிட்டு ஷகிலா என்னைக் கடுமையாகத் தாக்குவார். நேற்றைய சம்பவத்தில் அவர் என்னை முதல் அடித்தார். 

அதனால்தான் நான் திருப்பி அடித்தேன். பிறகு அவரது வழக்கறிஞர் சமாதானம் பேச வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து எங்களது தலைமுடியை பிடித்துக்கொண்டார். அதனால்தான் என் அம்மாவும் தாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது” என்று கூறியுள்ளார்.
 

Related Posts