நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்ட பிறகு புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். விஜயகுமார் குடும்பத்தில் மஞ்சுளாவும் இந்த அளவுக்கு பிரபலமாகவில்லை விஜயகுமாரும் இந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. ஆனால் வனிதா அவர்களது குடும்பத்தில் வரலாறு காணாத உயரத்திற்கு சென்றுவிட்டார். குறிப்பாக நெகட்டிவ் பப்ளிசிட்டி தான் அதிகம். இப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகள், கடை திறப்பு விழாக்கள், படவாய்ப்புகளும் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. மேலும் வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அதன் பின் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார். கடந்த வருடம் பீட்டர் பால் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய வனிதாவிடம் தொகுப்பாளர் வில்லங்கமாக திருமணம் பற்றி பல கேள்விகள் கேட்டார். அதற்கு கோபப்படாமல் பதில் சொன்ன வனிதா தான் இதுவரை சட்டப்படி இரண்டு முறை தான் திருமணம் செய்து இருப்பதாகவும், மூன்றாவது முறையும் செய்வேன் என கூறி இருக்கிறார். 3ம் திருமணம் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு என கூறிய அவரிடம் மாப்பிள்ளை கருப்பா இருக்கணுமா இல்லை செகப்பா இருக்கணுமா என தொகுப்பாளர் கேட்டதற்கு, பச்சையாக இருக்கனும். குபேரன் போல பச்சையாக இருக்க வேண்டும் என காட்டமாக பதில் கொடுத்து இருக்கிறார்.