அப்பா சொத்து வேண்டாமா? தானே கோடிக்கணக்கில் சொத்து சேர்த்திய நடிகை!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

நடிகை ஸ்ருதிஹாசன் ஹே ராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகமானார். ஆரம்பத்தில் இவர் பள்ளி, கல்லூரி, இசை என தொடர்ந்து தனது படிப்புகளை கவனித்து வந்தார். பின் பாடகியாக கலக்கிவந்தவர் கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் வானம் எல்லை என்பது இங்கில்லை பாடலை பாடியிருந்தார். அப்பாடலை தொடர்ந்து தமிழை போற்றும் வண்ணம் உருவான செம்மொழி பாடலில் ஹை பிட்சில் பாடல் பாடி அனைவரின் கவனத்தை பெற்றார்.அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கலக்கிவந்தவர் கடைசியாக பெரிய பட்ஜெட்டில் உருவான சலார் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இவர் தனது முகவடிவை மாற்றியபின்னர் தான் இவருக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னரெல்லாம் இவர் நடிகை என்பதை தாண்டி பாடகி என்பது தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும்.

 

Related Posts