பேருந்தில் இருந்து கர்ப்பிணி மனைவியைக் காலால் எட்டி உதைத்த கணவன்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் ( 24). இவருக்கும், நத்தம் கல்வேலிபட்டியை சேர்ந்த பாலமுருகன் மகள் வளர்மதி (19) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது வளர்மதி 5 மாத கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு கணவன்- மனைவி இருவரும் திண்டுக்கல்லில் இருந்து பொன்னமராவதி நோக்கிச் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாண்டியன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. கணவன்- மனைவி இருவருக்கும் இடையே பேருந்துக்குள் வாக்குவாதம் நடந்ததுள்ளது.

 அப்போது கணவாய்பட்டி ஒத்தக்கடை அருகே உள்ள பாச்சா கடை என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பின் பக்க படிக்கட்டில் அமர்ந்திருந்த பாண்டியன் அவரது மனைவியைக் காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வளர்மதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Posts