பொது ஷோவில் சண்டை போட்டுக்கொண்ட பிக்பாஸ் பிரபலம்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

விஜய்டிவியில் புதிய ஷோவான அண்டாகாகசம் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இந்த வாரம் பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். தினேஷ், விசித்ரா உள்ளிட்ட பல பேர் கெஸ்ட் ஆக வந்திருக்கின்றனர். விசித்ராவின் எதிரணியில் தான் தினேஷ் இருப்பார் என டீம் சொல்லி இருக்கிறது. அவர் என்னுடைய டீமில் தான் இருக்க வேண்டும் என விசித்ரா கேட்டாராம். இது பற்றி தினேஷ் உடன் டீம் பேசியபோது, அவர் ஏற்கனவே பிக் பாஸில் என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி மோசமாக பேசினார். இப்போது அவர் அருகில் ஒரே டீமில் இருப்பது சரியாக இருக்காது என சொல்லிவிட்டாராம். 

தினேஷ் மறுத்த நிலையில் விசித்ரா நிகழ்ச்சி தயாரிக்கும் டீம் உடன் சண்டை போட்டுவிட்டு கிளம்பி சென்றுவிட்டாராம். இது fun ஷோ தான், எந்த டீம் என்பது பிரச்சனை இல்லை என அவர்கள் கூறி சமாதானப்படுத்த முயற்சித்தும் பலன் இல்லையாம். கலகலப்பான ஷோவே இப்படி சண்டை போட்டுகொண்டு செல்லும் அளவிற்கு சென்றுள்ளது. இவர்கள் இருவருக்குள் அப்படி என்னதான் பிரச்சனையோ? எப்போது பார்த்தாலும் எலியும் பூனையுமாக உள்ளார்கள். கண்டிப்பாக பிக்பாஸ் வரும் முன்னரே இருவருக்கும் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது தெரிகிறது.

Related Posts