கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் உயிரிழந்தார். இவருடைய மரணம் தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. திரையுலகில் பல நட்சத்திரங்களை உயர்த்திவிட்டு விஜயகாந்தின் மகன் இதுவரை சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு வராமல் இருக்கிறார். வெளிப்படையாக சொல்லப்போனால், பொதுமக்கள் பலரும் விஜயகாந்த் மகன் சினிமாவில் நடிக்கிறாரா என கேட்கும் நிலை தான். கண்டிப்பாக விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியனுக்கு திரையுலகில் இருந்து உதவவேண்டும் என ராகவா லாரன்ஸ் உள்பட பலரும் கூறியுள்ளார்கள். ஷண்முக பாண்டியன் படத்தில் நான் கேமியோ ரோலில் நடிக்கிறேன், அது அந்த படத்திற்கும், விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியனுக்கும் நான் செய்யும் கைமாறாக இருக்கும் என ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார்.
அதன்படி, தற்போது ஷண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்து வரும் படைத்தலைவன் படத்தில் கேமியோ ரோலில் அதாவது கவுரவ தோற்றத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸின் இந்த விஷயத்தை திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகிறார்கள். முன்னொரு காலத்தில் விஜய் யார் என யாருக்கும் தெரியாத காலத்தில் விஜயகாந்த், விஜய் படத்தில் விஜயின் அப்பா கேட்டுக்கொண்டதற்கு இணங்க நடித்து கொடுத்தார். அதேபோல் தன்னை உயர்த்திய விஜயகாந்திற்கு கைமாறு செய்யும் விதமாக இப்போது விஜய், ஷண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் நடித்து கொடுத்தால் மட்டுமே சரியாக இருக்கும். ஆனால் விஜய் அப்படி செய்வாரா??