கனடிய எல்லை பகுதியில் போதைப்பொருள் மீட்பு

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

கனடாவின் மானிட்டோபா எல்லை பகுதியில் சுமார் 400 கிலோ கிராம் எடையுடைய போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

பியரே பகுதியில் இதுவரையில் மீட்கப்பட்ட அதிகளவான போதைப்பொருள் தொகை இது என தெரிவிக்கப்படுகிறது.

methamphetamine வகை போதைப் பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது. 

அமெரிக்காவிலிருந்து வின்னிபெக் நோக்கி பயணித்த ட்ரக் வண்டி ஒன்றை சோதனை இட்டபோது குறித்த போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த போதை பொருட்கள் பொருட்களின் சந்தை பெறுமதி சுமார் ஐம்பது மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் டிரக் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.   

ஒன்றாரியோ,மெனிற்றோபா மற்றும் மேற்கு கனடா பகுதிகளில் இந்தப் போதைப் பொருள் விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts