அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றல் ; வாகனம் பறிமுதல்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

அனுமதி பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிசென்ற குற்றத்திற்காக டிப்பர் வாகனத்தையும், அதன் சாரதியையும் கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்தனர். 

புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார் டிப்பர் வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போதே அனுமதி பத்திரமின்றி கிரவல் மணல் ஏற்றி சென்றமை தெரியவந்துள்ளது. 

இரண்டு டிப்பர் வாகனத்தினதும் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிப்பர் வானத்தினையும் பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களையும், வாகனத்தையும் நீதிமன்றத்தில் முற்படுத்தபடவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts