ஒன்ராறியோ ஏரியின் மீது பனியில் விழுந்த இருவரின் நிலை?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


கிழக்கு ஒன்ராறியோவில் உள்ள ஏரியில் பனிப்பாறையில் விழுந்து காணாமல் போனதாகக் கூறப்படும் இருவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிங்ஸ்டனின் வடகிழக்கில் உள்ள சார்லஸ்டன் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மூன்று பேர் பனிக்கட்டி உள்ளே சிக்கினர் என ஒன்ராறியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒரு நபர் உறைந்த நீரில் இருந்து மீட்கப்பட்டார். மற்ற 2 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நீருக்கடியில் தேடி மீட்கும் பிரிவு மற்றும் விமான சேவைகள் ஆகியவற்றின் உதவியுடன் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

மிதமான குளிர் காலநிலை நிலவும் நேரத்தில் உறைந்த பனிக்கட்டிகளை தவிர்க்குமாறு பொலிசார் பொதுமக்களுக்கு நினைவூட்டுகின்றனர்.

Related Posts
©   Thedipaar

தல–தளபதி சந்திப்பு

©   Thedipaar

யாழில் கொடூர கொலை !