சினிமாவில் இறங்கிய அடுத்த வாரிசு நடிகர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சினிமாவில் ஜொலிக்கும் நட்சத்திரங்களின் குடும்பத்தில் இருந்து வரும் வாரிசுகளுக்கு முதல் வாய்ப்பு எளிதில் கிடைத்து விட்டாலும் அவர்கள் திறமையை நிரூபித்தால் தான் ரசிகர்கள் அடுத்தடுத்த படங்களில் ஏற்றுக்கொள்வார்கள். திறமை இல்லை என்றால் வெத்து ஹீரோ என ஓரமாக ஒதுக்கிவிடுவார்கள். அதுவே சாதாரண மக்களில் இருந்து ஹீரோவாக வந்தவர் திறமையாக இருந்தால் அவரை சினிமாவே ஒதுக்கினால் கூட மக்கள் ஒதுக்கிவிட மாட்டார்கள். எப்படியாவது வாய்ப்பு கொடுத்து விடுவார்கள்.  

அப்படித்தான் இந்த வரிசையில் தற்போது விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். ஓஹோ எந்தன் பேபி என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை விஷ்ணு விஷால் தான் தயாரிக்கிறார். ருத்ராவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் நடிக்க இருக்கிறார். மேலும் பிக் பாஸ் புகழ் நிவாஷினியும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறாராம். காமெடியனாக கருணாகரன் நடிக்கிறார். பார்ப்போம் இவருக்கும் திறமை இருந்தால் தானே இங்கு நிலைத்து நிற்க முடியும்? பார்ப்போம் நிற்கிறாரா என்று!

 

Related Posts