தற்போது திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார் வனிதா விஜயகுமார். மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றாலும் கூட இப்போது தனியாக தான் வாழ்கிறார்.
சமீபத்தில் நடந்த பிக் பாஸ் சீசன் 7 வனிதா மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கேற்று இருந்தார். பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஜோவிகா தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கு பட வாய்ப்புகள் கூட வருவதாக வனிதா கூறி இருந்தார்.
நடிகை வனிதா விஜயகுமார் Youtube மட்டுமின்றி வேறொரு தொழிலும் செய்து வருகிறாராம். ஆம், சொந்தமாக துணிக்கடை ஒன்றை வனிதா விஜயகுமார் நடத்தி வருகிறார். பெரும்பாலும் நடிகைகள் பலரும் ரியல் எஸ்டேட், துணிக்கடை, டீக்கடை, ஹோட்டல் வைத்து நடத்துவது இப்போது பிரபலமாகி விட்டது.
அப்படித்தான் வனிதாவும் துணிக்கடை வைத்துள்ளார். இந்த கடையில் துணிகள் மட்டுமின்றி மேக்கப் பொருட்களும் கிடைக்கிறது என கூறப்படுகிறது. இந்த கடையில் விற்கப்படும் அனைத்து ஆடைகளும் வனிதா வடிவமைத்த ஆடைகள் தானாம். வனிதா விஜயகுமார் பேஷன் டெக்னாலஜியில் டிப்ளமோ படித்து முடித்துள்ளாராம். இந்த கடை மூலம் பல லட்சங்களில் வருமானம் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் சினேகா சினேகாலயா என்ற துணிக்கடையை துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.