காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ள நாடுகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உலகெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் காதலர் தினத்தை குறிப்பிட்ட 5 நாடுகளில் மட்டும் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவை மீறி கொண்டாடினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி தடை விதிக்கும் அளவுக்கு காதலர் தினம் கொண்டாடுவது என்ன அவ்வளவு மோசமானதா?

குறிப்பாக காதலர் தினத்தன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் அன்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்திக் கொள்வது வழக்கம். ஆனால் குறிப்பிட்ட இந்த ஐந்து நாடுகளில் மட்டும் காதலர் தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பலருக்கு ஏன் இப்படி அறிவித்துள்ளார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு தடை விதித்த முதல் நாடு சவுதி அரேபியா.

இந்நாட்டில் காதலர் தினம் கொண்டாடப்பட்டால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக மலேசியாவும் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது.

மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால், இங்கே காதலர் தினம் கொண்டாட அனுமதி இல்லை. இந்த கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டில் பாபரின் பிறந்தநாள் பெப்ரவரி 14ம் திகதி கொண்டாடப்படுவதனால், கடந்த 2012 இல் இருந்து காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

காதலர் தினக் கொண்டாட்டம் என்பது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானிலும் காதலர் தினத்தை கொண்டாடுவதில்லை.

ஈரான் நாட்டில் 2010 ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறகு காதலர் தினத்தை கொண்டாட கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், காதலர் தினத்தை சீரழிவு விழாவாக அறிவித்துள்ள ஈரான் நாட்டு அரசாங்கம், அந்நாளில் காதலர் தினம் தொடர்பான பரிசுகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளது.

Related Posts