மன்னாரில் ஃபிளமிங்கோ பறவைகள் வருகை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மன்னாரில் புலம்பெயர் பறவைகள் எனப்படும் ஃபிளமிங்கோக்கள் பறவைகள் அதிகளவில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு , காலநிலை மற்றும் இனப்பெருக்கங்களை மேம்படுத்துவதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கள் நாட்டிலிருந்து இலங்கைக்கு குறித்த பறவைகள் இடம்பெயர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் பறவைகளுக்குள், மிகவும் அரிதான மற்றும் மிகவும் உணர்திறன் கொண்ட பறவை இனம் தான் ஃபிளமிங்கோ.

தற்போது அவை அனைத்தும் மன்னாரில் குவிந்துள்ளன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் இந்த ஃபிளமிங்கோக்கள் எனும் புலம்பெயர் பறவைகளிகளின் வருகை அமைந்துள்ளது.

இந்த வகை பறவைகள் நவம்பரில் மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை இருக்கும்.

மன்னாரில் தற்போது சுமார் 3,000 இற்கும் அதிகமான ஃபிளமிங்கோக் பறவைகளை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடந்த சில வருடங்களாக மன்னாருக்கு வருகைத்தரும் ஃபிளமிங்கோக் பறவைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts