அரச சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்படாததன் காரணமாக தேசிய பாடசாலைகளுக்கு 54 அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
சுயாதீன ஆணைக்குழுவிற்கு ஓய்வுபெற்ற நபர்களை நியமித்ததன் மூலம் அதன் பணி வினை திறனற்றதாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
6 மாதங்களாக முயற்சித்து வருகிறோம், பொதுச் சேவை ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கவில்லை அதனை வர்த்தமானியில் வெளியிட.எனவே இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டாலும் ஓய்வு பெற்றவர்களை நியமித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. எனவே விரைவில் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளேன். அனுமதி கேட்டு 6 மாதங்கள் ஆகிறது.வாரம் வாரம் அனுமதி தருகிறோம் என கூறுகின்றனர். ஆனால் அனுமதி தருவதில்லை. அப்படியானால் சுயாதீன ஆணைக்குழுக்கள் எவ்வளவு தோல்வியில் இருக்கின்றது என பாருங்கள்.நாட்டுக்கு எந்தவொரு பணியும் இடம்பெறுவதில்லை” என்றார்.
சாதாரண தரப் பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“உயர்தர வினாத்தாள்கள் இன்னும் மதிப்பீடு செய்யப்படுகிறது. பெப்ரவரி இறுதிக்குள் அது முடிவடையும். அதன்பிறகு, நடைமுறை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. இவை அனைத்தும் நிறைவடைந்த பின்னர் சாதாரண தர பரீட்சை தொடங்குவதற்கு முன்னர் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வௌியிடும் என எதிர்பார்க்கின்றோம்” என்றார். (P)