கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, ஒரே சமயத்தில் 20 ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதாகக் கூறி ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
ஒரே நேரத்தில் இத்தனை செல்போன்களை பயன்படுத்துவதற்கான காரணத்தை விளக்கிய சுந்தர் பிச்சை, “பணி நிமித்தமாக இத்தனை ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டி இருக்கிறது.
பல்வேறு சாதனங்களில் கூகுள் புராடெக்ட்களின் இயக்கம் எப்படி என்பதை சோதிக்கவும், அப்டேட்டில் இருக்கவும் இதைத் தொடர்ந்து செய்து வருகிறேன். இப்படி செயல்பட்டால்தான், பொதுமக்கள் விரும்பும் புத்தம்புதிய அம்சங்களை கூகுள் நிறுவனத்தால் கொடுக்க முடியும்" என்று சொன்னார்.
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்தும் பேசிய சுந்தர் பிச்சை, "மனிதன் உறுவாக்கிய மிக முக்கிய தொழில்நுட்பமாக ஏஐ இருக்கும். எப்படி நெருப்பும், மின்சாரமும் மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அது போன்ற தாக்கத்தை ஏஐ நிச்சயமாக ஏற்படுத்தும்" என்றார்.