பரீட்சை வினாத்தாளில் ஒரு நாடு : இரு தேசம் வினா பொலிஸார் விசாரணை !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நடத்தப் படும் தரம் 11 தமிழ் மொழி பாடப் பரீட்சை வினாத்தாளில் ‘ஒரு நாடு : இரு தேசம்’ தொடர்பாக இடம்பெற்றுள்ள வினாவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் 11ஆம் தர மாணவர்களுக்கு நடத்தப்படும் மூன்றாம் தவணைப் பரீட்சையில் தமிழ் மொழிக்கான பரீட்சை கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்டது.

தமிழ் மொழி பாடத்தின் பகுதி 1 வினாத்தாளில் மிகப்பொருத்தமான விடையை தெரிவு செய்க என்ற தலைப்புடன் காணப்பட்ட வினாக்களில்,

‘ஒரு நாடு: இரு தேசம்’ என தமிழர்கள் முழங்கினர். இவ்வாக்கியம் (1) தனி வாக்கியம் (2) கலப்பு வாக்கியம். (3) தொடர் வாக்கியம் (4) கூட்டு வாக்கியம் என காணப்பட்டது.

இந்த வினாத்தாள் படம் பிடிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு, வைரலானது.

இந்த கேள்வி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (P)Related Posts