பணத்தை திரும்ப பெறலாம் - இலங்கை இசை நிகழ்ச்சி குழு அறிவிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கையில் நடைபெற்ற பின்னணிப் பாடகர் ஹரிஹரனின் இசைநிகழ்ச்சியில் குளறுபடிகள் ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுப்பதாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நிகழ்வில் ஏற்பட்ட சிறு தடங்கல் மற்றும் அசௌகரியத்திற்காக வருந்துகிறோம். இதன் காரணமாக, கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீண்டும் அளிப்பதற்கு முடிவு செய்துள்ளோம். 

தங்களால் செலுத்தப்பட்ட பணம் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் நினைப்பவர்கள் அவ்வாறே விட்டு விட, பணத்தினை மீளப் பெற விரும்புபவர்கள் தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தை 0777315262 தொடர்பு கொள்ளுங்கள்' என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Related Posts