காதலனுடன் மது குடித்த கல்லூரி மாணவி திடீர் உயிரிழப்பு!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

காதலனுடன் மது குடித்த மாணவி திடீரென இறந்தார். போதைக்காளான் அவரது உயிரை பறித்ததா என்பது தொடர்பாக காதலனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

கல்லூரி விடுமுறையான கடந்த சனிக்கிழமை காதலனின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவி கோவையில் இருந்து ஊட்டி வந்தார். அங்கு மாணவியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்ட காதலன் டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கிக்கொண்டு தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஆன்லைன் மூலம் உணவு முன்பதிவு செய்து வீட்டுக்கு வரவழைத்தார். 

இதைத்தொடர்ந்து இருவரும் மது அருந்தி உள்ளனர். இதன்பின்னர் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள பைன் பாரஸ்ட் பகுதிக்கு சென்று மேஜிக் காளான் எனப்படும் போதை காளான் பறித்து வந்து மதுவுடன் அதையும் சேர்த்து சாப்பிட்டு உள்ளனர். இதனால் போதை தலைக்கு ஏறி இருவரும் நிலைகுலைந்து காணப்பட்டு உள்ளனர். பின்னர் 2 பேரும் தூங்கிவிட்டனர்.

காலையில் கண்விழித்து எழுந்த காதலன், காதலி படுக்கையை விட்டு எழாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். எவ்வளவோ எழுப்பியும் எழுந்திருக்கவில்லை என்பதால், 108 ஆம்புலன்சுக்கு அழைத்துள்ளார். 

அங்கு வந்த மருத்துவ பணியாளர், இளம் பெண்ணின் உடலை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு இறந்துவிட்டதால் இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Posts