Font size:
Print
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய முனைய நிறுவனத்தின் எரிபொருள் களஞ்சியப்படுத்தல் மற்றும் எரிபொருள் விநியோகம் என்பனவற்றுடன் தொடர்புடைய 13 லட்சம் தகவல்கள் பிரதான தரவுக் கட்டமைப்பிலிருந்து அல்லது எஸ்.ஏ.பி. தளத்திலிருந்து அழிக்கப்பட்டு அல்லது மாற்றப்பட்டுள்ளன என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டிலிருந்து தரவு அழிப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் தனது சமூக வலைத்தளத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடி நிலவிய 2022 ஆம் ஆண்டிலேயே பெருமளவான தரவு அழிப்பு செயற்பாடு இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கே.பி.எம்.ஜி. நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், அமைச்சர் இந்த விடயங்களை வெளிக்கொணர்ந்துள்ளார். (P)
Related Posts