அஜித்துடன் பழைய படங்களில் நடித்த சிவா! 10 வருடங்களுக்கு முன்னே!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து இருக்கிறார். காமெடி கலந்த நடிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரையும் அவர் கவர்ந்து வருகிறார். சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்து வருகிறார். இவரது அப்பா போலீஸ் அதிகாரி, அக்காவோ மருத்துவர் இவரோ முதுகலை பட்டதாரி. இப்படி படிப்பு பின்புலம் வாய்ந்த குடும்பத்தில் இருந்து வந்தவர். இப்போது சினிமாவில் முடிசூடா மன்னனாக உள்ளார். அவர் நடித்த அயலான் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன நிலையில் அடுத்து SK 21 படத்தில் மிலிட்டரி மேன் ஆக நடித்து வருகிறார்.அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் உடன் சிவா கூட்டணி சேர்ந்து இருக்கிறார்..சிவகார்த்திகேயன் டிவியில் இருந்து சினிமாவில் ஹீரோவாக வளர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். 

அப்படி சிவகார்த்திகேயன் ஆரம்பகாலத்தில் படங்களில் சின்ன ரோல்களில் எல்லாம் நடித்து இருக்கிறார்.அஜித் - நயன்தாரா நடிப்பில் 2008ல் வெளிவந்த ஏகன் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு காட்சியில் மட்டும் அஜித் உடன் நடித்திருப்பார். அன்று நயன்தாராவுடன் கிடைத்த வேடத்தில் நடித்தவர் இப்போது நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கிறார். அஜித்துக்கு இணையாக வளர்ந்து வருகிறார்.

Related Posts