பேர குழந்தையே பிறந்தும் கூட, மகனுடன் போட்டி போடும் மம்மூட்டியின் இளமைக்கு காரணம்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் மம்முட்டி மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரு பிரபலம். மலையாள சினிமாவில் மட்டுமல்ல, இங்கேயும் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. தமிழ், ஆங்கிலம் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பேர குழந்தையே வந்தும் கூட, இப்போதும் இவர் ஹீரோவாக நடித்தால் இவரை ரசிக்கிறார்கள். காரணம் இவரது இளமையான தோற்றம். அப்படி தன்னை இளமையாக வைத்துக்கொள்ள அவர் மேற்கொள்ளும் சில யுக்திகளை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். 72 வயதாகும் இவர் அவரது மகன் துல்கர் சல்மானுக்கே டப் கொடுக்கும் வகையில் மிகவும் இளமையுடன் தான் தோற்றமளிக்கிறார். இதற்கு அவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளும், உணவு கட்டுப்பாடும் தான் முக்கிய காரணம். 

மம்முட்டி வாலிபால் விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவராம். இதேபோல் டயட்டும், ஒர்க்அவுட் விஷயத்தில் கண்டிப்பாக இருப்பாராம். மேலும் உணவுகளை குறைவாக தான் சாப்பிடுவாராம். தினமும் அரை மணிநேரம் ஒர்க்அவுட் மற்றும் ரன்னிங் பயிற்சி மேற்கொள்வாராம். எதற்கு டென்ஷன் ஆகாமல் அமைதியாக இருக்கவே அவருக்கு பிடிக்குமாம், அதிகமாக இசையை கேட்பாராம்.முக்கியமாக தன் வயதை பற்றி கவலைப்படாமல் மகிழ்ச்சியாக வாழ்வதையே அவர் அதிகம் விரும்புவாராம்.

Related Posts