Font size:
Print
ஜெர்மனி தலைநகர் முனிச்சில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தியா சார்பில் இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த மாநாட்டின் ஒருபகுதியாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜுலியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Related Posts