Font size:
Print
நுவரெலியாவில் 2,000 ரூபாய்கும் மேல், விற்பனைச் செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் கேரட்டின் விலை 360 ரூபாவாக ஞாயிற்றுக்கிழமை (18) குறைந்துள்ளது.
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கேரட்டின் விலை 360 ரூபாவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் இன்னும் வழமைக்கு திரும்பாத காரணத்தினால் சந்தையில் கேரட்டின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது .
நுவரெலியா மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் நிலவும் சிறந்த காலநிலை காரணமாக மலையகத்தில் அனைத்து மரக்கறி வகைகளின் விலைகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. (P)
Related Posts