பாராளுமன்றம் ஏப்ரலில் கலைப்பு!- முன்கூட்டியே பொதுத் தேர்தல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாராளுமன்றத்தை ஏப்ரல் மாத இரண்டாம் வாரத்தில் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல ஜனாதிபதி ரணில் தீர்மானித்துள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களை ஆதாரம் காட்டி தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 இதற்கமைய ஜூலை நடுப்பகுதியில் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்படுகிறது.  எதிர்க்கட்சியிலிருந்து ஆளுங்கட்சிக்கு வருவோரை ஏற்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 எதிர்க்கட்சியிலிருந்து அரசியல்வாதிகளைக் கொண்டுவரும் செயற்பாட்டின் முதல் அம்சமாக சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் எம்.பி. ரவி கருணாநாயக்கவின் கொழும்பு இல்லத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் உட்பட 14 எம்.பிக்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இதில் ஜனாதிபதி ரணில் கலந்துகொண்டு அரசியல் நிலைமைகளை விளக்கியுளளார். (P)

Related Posts