கவுண்டமணியின் மூத்த மகளா இவர்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் கவுண்டமணி. இவர் இப்போது நடிக்க மட்டும் தான் இல்லை இருப்பினும் இவர் நடிக்க மாட்டாரா என ரசிகர்கள் ஏங்குகிறார்கள். இவரை மீண்டும் திரையில் பார்க்கமாட்டோமா ஒரு கூட்டமே காத்து கிடக்கிறது. ஆனால் வயது மூப்பால் நடிக்காமல் உள்ளார். இவருடைய நகைச்சுவை காட்சிகளை எப்போது பார்த்தாலும், சலிக்கவே சலிக்காது.அதுவும் கவுண்டமணி, செந்தில், சத்யராஜ், மணிவண்ணன் என இவர்களது கூட்டணி என்றால் சொல்லவே தேவையில்லை, நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. தற்போது இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. 84 வயதாகும் நடிகர் கவுண்டமணி இன்று மட்டுமல்ல என்றுமே நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளார். நடிகர் கவுண்டமணிக்கு இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளின் திருமணத்தின்போது, நடிகர் ரஜினிகாந்த் அங்கு வந்து மணமக்களை வாழ்த்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Related Posts