Font size:
Print
திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அதிதி ஷங்கர். மருத்துவம் படித்துவிட்டு ஆர்வம் காரணமாக இப்போது சினிமாவில் இறங்கிவிட்டார்.
நடிகை அதிதி ஷங்கரின் அக்கா ஐஸ்வர்யாவிற்கு கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். ஆனால், இந்த திருமண வாழ்க்கை ஐஸ்வர்யாவிற்கு நீடிக்கவில்லை.இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், தற்போது ஷங்கரின் துணை இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன், ஐஸ்வர்யா ஷங்கருக்கு இரண்டாம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இவர்களுடைய நிச்சயதார்த்தம் விமர்சையாக நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Related Posts