‘இந்தியாவின் ஒரு பகுதிதான் இலங்கை’:ஹரின் பெர்னாண்டோ முன்வைத்த கருத்து தொடர்பில் பாராளுமன்றத்தில் வாக்குவாதம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ முன்வைத்த கருத்து பல்வேறு மட்டத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த அறிக்கைக்கு எதிராக அரசியல் காட்சிகள் மற்றும் அரசியல் தலைமைகள் நாளாந்தம் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையிலே  இன்று (20) நாடாளுமன்றத்தில் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியமையானது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தா என  விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.

அத்துடன், இந்த விடயம் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தா அல்லது தனிப்பட்ட கருத்தா என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு தொடர்பில் இவ்வாறான தனிப்பட்ட கருத்தை கொண்டிருக்க என்ன உரிமை உள்ளது எனவும் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், குறித்த விடயம் சமூக ஊடகங்களில் திருப்பு படுத்தப்பட்டுள்ளதாக ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். (P)


Related Posts